இந்த இணையத்தளம் புத்துருவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனால், இதில் பல பகுதிகள் முழுமையற்றனவாய் உள்ளன. புத்துருவாக்கப் பணிகள் விரைவில் நிறைவடையும்.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் - பிரான்சு

ASSOCIATION TAMOULCHOLAI - FRANCE

பிரான்சில் வளரும் எம் இளந்தலைமுறையினரைத் தமிழோடும் தமிழ்க் கலைகளோடும் தமிழ்ப்பண்பாட்டோடும் இணைக்கும் கல்விசார் அமைப்பு

எதிர்வரும் நிகழ்வுகள்

தமிழியல் இளங்கலைமாணிப் பட்டமளிப்பு விழா - 2025

பிரான்சில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் மூன்றாவது தமிழியல் பட்டமளிப்பு விழா


தேதி: 21.09.2025 | இடம்: Millenium அரங்கு, Savigny le Temple, France

PDF அறிக்கையை பதிவிறக்கம் செய்க

நிகழ்வின் புகைப்படங்கள் (காட்சியகம்)

விழாவின் முக்கிய அம்சங்கள்

விழாவின் கருப்பொருள்
மண்ணும் மக்களும்

இப்பட்டமளிப்பு விழா 'மண்ணும் மக்களும்' (Land and People) என்னும் மையக் கருப்பொருளை ஒட்டி மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

பட்டதாரிகள்
40 புதிய பட்டதாரிகள்

இம்முறை 40 பேர் இளங்கலைமாணிப் பட்டம் பெற்றனர். புலம்பெயர் நாட்டில் தமிழில் நூறுக்கும் அதிகமானவர்கள் (மொத்தம் 102) பட்டம் பெற்ற முதல் நிகழ்வு இதுவாகும்.

வரலாற்றில் முதல் முறை
சிறப்பு விருந்தினர்கள்
முனைவர்கள் வருகை

இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருந்த அறிவியலாளர் முனைவர் சிதம்பரநாதம் சபேசன் அவர்கள் பட்டங்களையும், தமிழ்நாடு முனைவர் முத்துச்செல்வன் அவர்கள் பதக்கங்களையும் வழங்கினார்கள்.


அமர்வுகளும் வெளியீடுகளும்

காலை அமர்வு: தியாகதீபம் திலிபன் ஆய்வரங்கு

ஆய்வரங்கின் தொடக்கத்தில் தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஐந்து ஆய்வுக்கட்டுரைகள் சிறப்பாக ஒப்பளிக்கப்பட்டன.

நூல் வெளியீடுகள்:
  • 1. தியாகதீபம் ஆய்வுநூல் (மும்மொழிகளில்)
  • 2. விதைப்பு 2 (சிறுகதைத் தொகுப்பு)
  • 3. முட்காட்டுப் பூ (புதினம் - ஆதிலட்சுமி சிவகுமார்)
மதிய அமர்வு: பட்டமளிப்பு விழா மற்றும் கலை நிகழ்வுகள்

இளங்கலைமாணி பட்டம் வழங்கும் நிகழ்வு, பட்டதாரிகளின் உறுதிமொழி மற்றும் வளர்தமிழ் 12 நிறைவுசெய்த மாணவர்களின் மதிப்பளிப்பு ஆகியவை இடம்பெற்றன.

கலை மற்றும் பாரம்பரியம்:
  • இன்னிய அணிவகுப்பு
  • 🥁 வெர்சைல் தமிழ்ச்சோலை மாணவர்களின் பறை இசை
  • 🥣 முள்ளிவாய்க்கால் கஞ்சி (நினைவூட்டல்)
  • 🏺 தமிழர்களின் மண்சார்ந்த பாரம்பரிய பொருட்கள் காட்சிப்படுத்தல்