இந்த இணையத்தளம் புத்துருவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனால், இதில் பல பகுதிகள் முழுமையற்றனவாய் உள்ளன. புத்துருவாக்கப் பணிகள் விரைவில் நிறைவடையும்.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் - பிரான்சு

ASSOCIATION TAMOULCHOLAI - FRANCE

பிரான்சில் வளரும் எம் இளந்தலைமுறையினரைத் தமிழோடும் தமிழ்க் கலைகளோடும் தமிழ்ப்பண்பாட்டோடும் இணைக்கும் கல்விசார் அமைப்பு

எதிர்வரும் நிகழ்வுகள்

மாவீரர் நினைவுசுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல் -2025

மாவீரர் நினைவுசுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல் -2025

மாவீரர் நினைவு தாயக வரலாற்றுத் திறனறிதல் – 2025
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் வழங்குகிறது

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக நடத்தும் “மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல் – 2025” இணையவழியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வு வரும் நவம்பர் 15 மற்றும் 16 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெறும்.

🌍 தாயக வரலாற்றுத் திறனறிதல் – வழிகாட்டு நெறிமுறைகள்

  1. வயது, அகவை வேறுபாடின்றி அனைவரும் பங்குகொள்ளலாம்.

  2. உலகின் எங்கிருந்தும் இணையவழியில் பங்கேற்கலாம்.

  3. ஒவ்வொருவரும் ஒரு தடவை மட்டுமே திறனறிதலைச் செய்யலாம்.

  4. நேரக்கட்டுப்பாட்டின்படி தேர்வை முடிக்க வேண்டும்.

  5. நேரம் மீறி முடிக்கப்பட்ட திறனறிதலுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படமாட்டாது.

  6. தமிழிலும் ஆங்கிலத்திலும் தமது பெயரைத் துல்லியமாக எழுத வேண்டும்.

  7. பெயர் பிழையாக எழுதப்பட்டால் சான்றிதழிலும் அதேபோலவே வரும்; பின்னர் திருத்த முடியாது.

  8. iCloud மின்னஞ்சல் முகவரிகள் பயன்படுத்தப்படாதீர்கள்.

  9. திறனறிதல் கணினி, டேப்லெட் அல்லது திறன்பேசி (Smartphone) வழியாக மட்டுமே செய்யப்பட வேண்டும்.

📖 ஏன் இத்திறனறிதல்?

காலச்சூழல் மனித வாழ்வையும் இயக்கத்தையும் தீர்மானிக்கிறது. இன்றைய உலகின் அரசியல், பொருளாதாரம், வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அனைத்தும் எமது நாளாந்த வாழ்க்கையுடன் இணைந்துள்ளன.

எமது உலகளாவிய தமிழ் வரலாறு தொடர வேண்டுமெனில், நம்முடைய கடந்தகாலத்தை அறிதல் அவசியம். இதனை நோக்கமாகக் கொண்டு வரலாற்றுத் திறனறிதல் இணையவழியில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

🌺 வரலாற்றறிவு – விடுதலையின் வழி

இந்நிகழ்வின் நோக்கம் வரலாற்றறிவை ஊக்குவித்து, எமது தேசிய நினைவையும் தாயக உறுதியையும் வலுப்படுத்துவதாகும்.
இந்தப் புரிதலை மனதில் கொண்டு, வரலாற்றுத் திறனறிதலில் பங்குகொண்டு அறிவூடாக எமது விடுதலையை விரைவாக்குவோம்.